கார்த்திகை தீபம் என்றால் என் நினைவில் வருவது? குட்டி தீபாவளி.
பெரும்பாலும் பண்டிகை நாட்களை, விடுமுறை நாட்களாக தான் பார்க்கிறோம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் களிக்கிறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டும் ஆர்வம் அந்த பண்டிகை கொண்டாடுவதில் நாம் காட்டுவதில்லை.
இன்றும் சில நேரங்களில் என் மனம் ஏங்கும், எத்தனை காலம் பணம், வேலை, சோம்பல்… என்று நான் சாக்குபோக்கு சொல்வது; என்னை சுற்றி சொந்தம், நண்பர்கள், குடும்பம்… அனைவரும் இருந்தாலும் நான் தனிமையில் தான் இருக்கிறேன்.
என்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்…!
அனைவருக்கும் என் இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்…
Filed under: சுவாரசியம், பொது
u r rit srini….we mostly spend the festival and not celebrating it.
no worries srini …whatever u feel like u have missed in your life …u can fulfill it in your new life (march 2009) …. just live as u think.
n good to see lot’s of improvement in writing…good work keep writin.